ரணில் அரசாங்கத்தில் திருப்தியில்லை

ரணில் அரசாங்கத்தில் திருப்தியில்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தினாலும் திருப்தியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

உண்மையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த குழு ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியிடம் திறமையான அணி இல்லை என தெரிவித்த உறுப்பினர், எதிர்வரும் தேர்தலில் நாட்டை அபிவிருத்தி செய்யும் குழுவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மழை பெய்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது செவிடாகவும் ஊமையாகவும் மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நீர் மின் உற்பத்தியின் பயனை மக்களுக்கு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் புதிய சித்தாந்தம் காணப்படுவதாகவும், அது எவ்வாறான தேர்தல் என்பது குறித்து நாட்டிற்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு கோருவதற்காகவே பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளதாகவும் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களை வாழ வைக்காமல் அவர்களின் சொந்த நலனுக்காக செயற்படுகின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது எனவும் தெரிவித்தார்

இலவசக் கல்வி, சுகாதாரம் இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அரச பல்கலைக்கழகப் பாடசாலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தனியார் பல்கலைக்கழகங்களும் வைத்தியசாலைகளும் சிறப்பாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This