படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கும் போராட்டத்திற்கும் ஏற்பாடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கும் போராட்டத்திற்கும் ஏற்பாடு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நாளை வெள்ளிக்கிழமை (31) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ளது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிள்ள இந்த நினைவேந்தலில் இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்கள் உட்பட பல தரப்பினர் பற்கேற்கவுள்ளனர்.

இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமும் இடம்பெறவுள்ளது.

இதில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

CATEGORIES
Share This