சித்தார்த்தன், விஜயகலா ஆகியோரின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

சித்தார்த்தன், விஜயகலா ஆகியோரின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்று பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரசினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடசாலை பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கேட்போர் கூட கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தார்.

நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக குறித்த வேலை திட்டம் முடிவுறுத்தப்படாமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டமருத்துவ பீட புதிய கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் குறித்த விடயம் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் உடனடியாக ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கையினையடுத்து 110 மில்லியன் ரூபா நிதியினை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதோடு மிகுதி 40 மில்லியன் எதிர்வரும் வாரமளவில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This