பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயை; ரணில் 2024 செயலணியின் தலைவர் மோகன்

பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயை; ரணில் 2024 செயலணியின் தலைவர் மோகன்

பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம். ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். என ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்நிலையில் தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்திகள் நடைபெறுகின்றது எனும் கருத்துக்கள் எதிர்க் கட்சிகளினது தாங்க முடியாத அவர்களின் மனச் சஞ்சலமாகும்.

ஏனெனில் தற்போது திறக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளாகும். எனவே தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றதென்பது ஏற்க முடியாத கருத்தாகும்.

தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் நிட்சயமாக தமிழர்களின் தலைவிதி மாறியிருக்கும். தற்போது எங்களுக்கு நாங்களே சூனியம் செய்து கொண்டு நாம் சகலதையும் இழந்து கொண்டிருக்கின்றோம். அதேபோன்றதொரு நிலையை தமிழர்கள் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடாது என நான் கருதுகின்றேன்.

ஏனெனில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவிலே தமிழ் தரப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்து. அந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகளை நாங்கள் தற்போது மறைமுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் மாவட்ட அபிவிருத்திக்குழு, வடக்கு, கிழக்கு மாகாண சபை அனைத்தும் சரியான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.

ஊழல்கள் திருட்டுக்கள் சர்வாதிகாரங்கள் நிறைந்திருக்காது என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ் தரப்பு இதுபோன்ற தவறுகளை இனிமேலும் செய்யக்கூடாது, சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலே ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாகும்.

எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே உள்ள பரீட்சையமான உறவை வைத்துக் கொண்டு ரணில் 2024 செயலணியின் தலைமைப் பெறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மால் முடிந்த அபிவிருத்திகளை அதிகளவு செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This