ரணிலிடம் 12 வருடங்களுக்கு நாட்டை ஒப்படையுங்கள்; இல்லையெனில் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும்
இலங்கையைப் பொருத்தவரையில் அடுத்து நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வல்லமைமிக்க ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு எந்தவொரு தரப்பினரிடமும் உரிய பதில் இல்லை.
தேசிய அரசியலிலும் சரி, கட்சி அரசியலிலும் சரி எந்தவொரு தரப்பும் பொருத்தமான தலைமைகளை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
இவ்வாறானதொரு பின்னணியில், இன்னும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஆள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு காலி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வெசாக் வலயத்திற்கான நிதியுதவி மற்றும் அரசி விநியோகிக்கும் நடவடிக்கை கட்சி அலுவலகத்தில்) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 1949 ஆம் ஆண்டு பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 75 வயது. இதன்படி, இன்னும் 12 ஆண்டுகள், அதாவது 87 வயதுவரை அவரால் ஆட்சி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதையினை எவரேனும் மாற்றினால் எமது நாடு மிகவும் கடினமான நிலைக்கு மீண்டும் தள்ளப்படும் எனவும் டாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.