முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை சமர்ப்பித்த சிறிதரன்

முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை சமர்ப்பித்த சிறிதரன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ”சிரட்டை ”ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த மாதம் எமக்கு மிகவும் முக்கியமானது.எமது வேதனைகளை வெளிப்படுத்துகிறது.நான் இந்த ” சிரட்டையை ”சபா பீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன். இதுதான் முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்குக் கஞ்சி வழங்கிய சிரட்டை.குடிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கவில்லை.

கஞ்சி காய்ச்சுவதற்கு அரிசி இல்லை. உப்பில்லை தண்ணீர் கூட எடுக்க முடியாத நிலைமை .இவ்வாறான நிலைமையில் வெறும் உப்பில்லாத கஞ்சியைக் காய்ச்சி இந்த சிரட்டையில் தான் அந்த மக்கள்,குழந்தைகள் குடித்து உயிர் தப்பினார்கள்.

அதனால் முள்ளிவாய்க்கால் அடையாளமாக இந்த சிரட்டையைச் சபா பீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன். தயவு செய்து பாராளுமன்றத்தின் நூதனசாலையில் இந்த சிரட்டையை வையுங்கள் என வலியுறுத்தினார்.

CATEGORIES
Share This