கோட்டா தாக்கப்பட்டு கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன்

கோட்டா தாக்கப்பட்டு கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன்

அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர்இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின்போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக்கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேறுபல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது இலங்கையில் ஜனாதிபதியொருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியை கைதுசெய்ததும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது கொழும்பு அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.

இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது உங்கள் ஜனாதிபதி மாத்திரம்தான் வேறு ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ள முகமட் நசீட் 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும துப்பாக்கி குண்டுகளும் இன்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் மாலியில் எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும் தென்னாசியா தப்பிபிழைக்காது என நான் கருதினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன் எனது மனதில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது வேறு எதனையும் விட முக்கியமானதாக காணப்பட்டது எனவும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அந்த காலகட்டத்தில் பதவி விலக தயராகயிருக்கவில்லை அவர்இன்னமும் வலுவானவராக காணப்பட்டார் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள முகமட் நசீட் இராணுவம் தலையிட முடியாது என எப்படி நான் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

CATEGORIES
Share This