மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு போன்றதா ஜனாதிபதி தேர்தல் திகதியும்?
மாகாண சபைத் தேர்தலுக்கு திகதி குறித்த பின்னரும் தேர்தல் நடைபெறவில்லை. இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் நடைபெறாமல் போகலாம் என்று பலரும் கருதும் நிலை உருவாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்கள் காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் எழுகின்றன.
முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் திகதியையும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.ஆனால் தற்போது வரை தேர்தல் இடம்பெறவில்லை. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டால் அதனை எவராலும் எதிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்படுகின்றன.காலம் தாழ்த்தி ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை அல்ல என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தேர்வு செய்யும் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கும் அவ்வாறான முனைப்பே வலுத்துள்ளதாக பேசப்படுகின்றது.
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் திடீரென நாடாளுமன்றம் அழைக்கப்படும் எனவும், மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் கூறப்படும் வதந்தியும் இதனுடன் தொடர்புடையதா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனுடன் தொடர்புபடுத்தி 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல், கருவூல கையிருப்பு போதியளவு இன்மையால் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல முடியாத அபாயம் காணாப்படுவதாக அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் சில வாதங்களை முன்வைக்கும் என அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன.