மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்

மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்

இலங்கைத்தீவில் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் மவ்பிம என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை வெளியான அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் அத்துரலியே தேரர், இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம் சமூகத்தைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் அவதானிக்கிறாா் என்பதை அறிய முடிகின்றது.

முஸ்லிம் மதரசா (Madrasa) பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாமியப் பாடநெறிகளை தேரர் முஸ்லிம் அடிப்படைவாதக் கல்வியாகவும் அக் கல்வி பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை போகலாம் என்ற தொனியிலும் கருத்திட்டிருக்கிறார்.

அந்தச் செய்தியில் முஸ்லிம்கள் தொடர்பாகத் தேரர் சுட்டிக்காட்டிய விபரங்களை அப்படியே தருகின்றேன். அவை பின்வருமாறு,

‘ நாட்டில் பல இடங்களில் அடிப்படைவாத பாடசாலைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் நாம் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கல்வியை வழங்குபவர்கள் யார்? சலுகைகளை வழங்குவது யார்? என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்‘

இப் பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச நிலைமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செய்தவர் கோட்டாபய ராஜபக்ச என வேடிக்கை கதைகளை கூறுவதில் பயனில்லை. எங்களுடைய நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்கள மக்களுடனே இருக்கிறார்கள்.

இவ்வாறான விடயங்களை நிறுத்த வேண்டுமானால் ஒழுங்கான கல்விக் கொள்கைகளை நாட்டில் உருவாக்க வேண்டும்.

சஹரான் போன்றவர்களால் குண்டுத் தாக்குதல் நடத்த முடியுமெனில் ஏனையோர்களாலும் இதனை செய்ய முடியும்.

ஆகவே இலங்கைத்தீவிலிருந்து முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

நாம் ஒருபோதும் இனவாதத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டதில்லை. அதேநேரம் கத்தோலிக்க சபையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையான தகவல்களை வழங்கிய நிலந்த ஜயவர்தன இன்று குற்றவாளியாகியாக மாற்றப்பட்டிருக்கிறார்.

எங்களுக்கு சமாதானம் தேவை. ஏழை மக்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபடவில்லை.

அதிக செல்வாக்குள்ள சில நபா்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

சாதாரணமாக மக்கள் போரில் ஈடுபடுவது உண்ண உணவு இல்லாத போதே, ஏழ்மையின் போதே. ஆனாலும் இவர்கள் அவ்வாறான விடயங்களுக்கு குண்டு தாக்குதலில் ஈடுபடவில்லை.

ஆகவே, இந்த முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று தேரர் கூறியிருக்கிறார்.

CATEGORIES
Share This