EPAPER
தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம்

தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம்

தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம். பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாவார் என அதாவது ஜனாதிபதி ஆவதற்கு 10 வருடங்களுக்கு முன்னரே கூறி இருந்தால் அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் அது நடந்தது.

மேலும், இலங்கையின் அரசியல் சூழலை பார்க்கும் பொழுது அது அவ்வளவு எளிமையான விடயமாக நான் பார்க்கவில்லை என்கிறார் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்.

இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேகமான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, “புவிசார் அரசியல் போட்டி நிலவி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் யுக்ரைன் மற்றம் ரஷ்ய மோதல் – இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதல் என்பவற்றின் அடிப்படையில் இவை மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா என்று பார்க்கும் நேரத்தில் மேற்குலக நாடுகளுக்கு எதிரி நாடாக காணப்படும் ஈரான் நாட்டு ஜனாதிபதியை இலங்கைக்கு அழைத்துவந்தமைக்கான காரணம் என்னவென கருதுகின்றீர்கள்” என வினவிய போது,

இலங்கையின் நிலைப்பாடானது, எல்லா நாடுகளுடனும் எங்களுக்கு நட்புறவான ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்பதே. இதை எமது ஜனாதிபதியும் இதே நோக்கத்தையே கொண்டிருக்கின்றார்.

இதனடிப்படையில் தான் ஈரான் ஜனாதிபதியும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்மூலம் பல ஆயிரம் கணக்கானவர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பை பெற்றக்கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமையும்.

மேலும் இலங்கையின் சர்வதேசத்தை கையாளும் ஒரு வெளிவிகார கொள்கையை பற்றித்தான் இவை அனைத்தையும் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

CATEGORIES
Share This