உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி sழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்

உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி sழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் சிறுவர்களின் நுகர்வுக்கு தகாத அரிசியானது உலக உணவுத் திட்டத்தினால் (World Food Programme – WFP) வழங்கப்பட்டதே தவிர, அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்கு உதவும் வகையில், குறித்த அரிசிப் பொதிகள் உலக உணவுத் திட்டத்தினால் மேலதிகமாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரச நிதியில் விநியோகிக்கப்படும் உணவு குழந்தைகள் உண்பதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினூடாக கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்புக்காக வழங்கப்பட்ட பின்னரும் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களினால் (Provincial Public Health Imspectors – PHIS) வழக்கமான தர பரிசோதனைகள் செய்யும்படி ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

அரசாங்கமானது, ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூபாய் 110 வீதம் ஒதுக்குகிறது. அதுமட்டுமில்லாமல் வேறு ஆதாரங்களிலுமிருந்தும் நிதி கிடைக்கப் பெறுகிறது.

இதன் விளைவாக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் கிடைக்கும் அரிசியை கலக்க வேண்டாம் என அமைச்சர் உத்தரவிட்டார்

CATEGORIES
Share This