தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம்
தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திவிசாரணைகள் மேற்கொள்ளப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று திங்கட்கிழமை(22) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தியத்தலாவ கார் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
Foxhill 2024 கார் பந்தயத்தின் போதே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் சிலர் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து சம்பவித்தமை குறிப்பிடத்தக்கது.