ஆபத்துக்களை அறிந்து துணிச்சலோடு செயற்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர் : ஏ.ஆர்.எம். ராபி தெரிவிப்பு
எப்போதும் பாதுகாப்பான எல்லைக்குள் நின்று கொண்டு சாதிக்க விரும்புபவர்கள் தான் உலகில் அதிகம். ஆனால் ஆபத்துக்களை அறிந்தும் துணிச்சலோடு செயல்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். இதில் கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம் சபீஸ் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் என கிழக்கின் கேடயம் இணைப்பாளர் ஆசிரியர் ஏ.ஆர்.எம். ராபி தெரிவித்தார்.
“கல்விக்கு ஒளியூட்டி ஆளுமையான தலைவர்களை தேசத்துக்கு விதைப்போம்” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வேற்றுமையில் ஒற்றுமை தான் வெற்றிக்கான சாத்தியம் என்ற யதார்த்தம் அறிந்து சென்ற உள்ளூராட்சித் தேர்தலில் எம் சமூகத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடும் இரு தலைமைகளையும் ஒரு புள்ளியில் இணைத்துப் பயணிக்கச் செய்த ஒரு ஆளுமையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றார் எஸ்.எம் சபிஸ்.
தமது சின்னங்களை இரு தலைவர்களும் எஸ்.எம் சபீஸ் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் என்றால் அது சாதாரண விடயமல்ல. அதேநேரம் இரு கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும், மனம் கோணாமல் கையாள்வது என்பது ஆற்றல் மிகுந்த கலையாகும். விமர்சனங்களை முன்வையாமல் குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைத்து இவர்பேசும் பேச்சுக்கள் இன்று எல்லோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது யாவரும் அறிந்தவிடயம். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தில் எஸ் எம் சபீஸ் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகின்றார் அதற்கு இவரது துணிச்சலான செயற்பாடுகளே காரணமாகும் என்றார்.
நூருல் ஹுதா உமர்