போதைபொருள் வைத்திருந்த வெளிநட்டவர் நுவரெலியாவில் கைது
நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவர்கள் பயணித்த வேனை சோதனையிட்ட போது 19 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 03 கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி 35 வயதுடைய பிரித்தானிய பெண் மற்றும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரையும் போதைப்பொருள் கையிருப்புடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என பொலிஸார் தெரிவித்தனர்.