ராமன், ரஹ்மான் கருத்துக்களை முன்வைத்தமைக்காக மன்னிப்பு கோரிய அப்துல் ம‌ஜீத்

ராமன், ரஹ்மான் கருத்துக்களை முன்வைத்தமைக்காக மன்னிப்பு கோரிய அப்துல் ம‌ஜீத்

”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச் சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர்.

இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை.

இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன்.

ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல் என‌ நான் ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால் நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன்.

ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து.

அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான் ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This