தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம்; சுரேஷ் எச்சரிக்கை: அனைத்துப் பதவிகளையும் துறக்கப் போவதாகவும் கூறுகிறார்

தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம்; சுரேஷ் எச்சரிக்கை: அனைத்துப் பதவிகளையும் துறக்கப் போவதாகவும் கூறுகிறார்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள அதிகரிப்பிற்கான நியாயமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த 10 ஆம் திகதி நடைபெறவிருந்த சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சம்பளம் வருகைத்தராமல் புறக்கணித்தமை முழு மலையகம் மற்றும் தொப்புள் கொடி உறவை புறக்கணித்ததாக கருதுகிறேன்.

நடைபெறவுள்ள இரண்டாவது சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் எவ்வாறு நடந்துக்கொள்ளப் போகின்றார்கள் என்பதை அவதானித்து அனைத்து தொழிற்சங்களும் ஒன்றிணைந்து

முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை விரட்டியடிப்பதற்பகான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சம்பள நிர்ணய சபை கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள அதிகரிப்பிற்கான நியாயமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்” என கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பான முதலாவது சம்பள நிர்ணய சபை கலந்துரையாடல் எவ்வித இணக்கப்பாடுமின்றி தோல்வியுற்றது.

முதலாளிமார் சம்மேளத்தின் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு வருகை தராமையே எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படாமைக்கான காரணம் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சம்பள நிர்ணய சபைக் கூட்டம் கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாத்திரமே கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

CATEGORIES
Share This