”உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியில் நியாயம் கிடைக்கும்”; அழையா விருந்தாளியாகவா தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் கலந்துகொண்டார்?

”உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியில் நியாயம் கிடைக்கும்”; அழையா விருந்தாளியாகவா தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் கலந்துகொண்டார்?

யாழ்ப்பாணத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாவட்ட மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றிருந்தமை தொடர்பில் சமூக வலைதளங்களிலும், பிரதான ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதில், “உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையா விருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் ஊடகங்களில் வெளியிடப்பட்டு இருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு பகிரப்பட்டுவரும் இரு செய்திகளின் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்துள்ளது.

Oruvan

இதன்படி, உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எந்தவொரு அரசியல்வாதியுடனோ அல்லது அரசியல் கட்சியுடனோ அவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும், எந்தவித வாக்குறுதிகளும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்திற்கு அநுரகுமார திசாநாயகவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாம் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இல்லை என தெரிவித்திருந்ததாகவும், கூட்டம் முடிந்தவுடன் சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ள சுமந்திரன், கூட்டம் நிறைவடையும் என கூறப்பட்ட நேரத்தில் அங்கு சென்ற போதிலும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த காரணத்தினால் காத்திருந்து சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Oruvan

ஆகவே, உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என்பதையும் factseeker உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையாவிருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள போதிலும் அதனை அவர் மறுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மூன்று தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு அழைப்பு விடுத்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயகவிடம் factseeker வினவிய நிலையில், தமது அழைப்பின் பேரிலேயே சுமந்திரன் அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த விடயத்தை அறிந்திருக்காது அவ்வாறு ஒரு தவறான தகவலை தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This