வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட உரிமையாளர்களுக்கு அனுமதி!
யாழ். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் நேற்று (11) பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வல்லை – அராலி வீதியில் பலாலி தெற்கு இராணுவச் சோதனை சாவடி ஊடாக அனுமதிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நிலங்களே இன்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்கள் கிராமசேவகர்களிடம் பதிவை மேற்கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நிலங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
33 ஆண்டுகளின் பின்பு தமது நிலங்களைப் பார்வையிட வந்த மக்கள் இராணுவச் சோதனையைச் சாவடியில் அடையாள அட்டை சகிதம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு கால்நடையாக மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் தமது நிலங்களைப் பார்வையிட ஆவலாக காலை 8 மணிமுதல் காவல் இருந்த பலரில் முதியவர்கள் சிலர் 4 மைல் தூரம் நடந்து பயணிக்க முடியாது எனத் திரும்பிச் சென்றனர்.