ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 24 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குற்றவியல் நடைமுறை (திருத்தம்) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் விஷ பொருட்கள், ஒளடதம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் படி முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.