“அமெரிக்கா – சீன” ஜனாதிபதிகள் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தாய்வான் மற்றும் பொருளாதார விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தாய்வானுக்கான தங்களது ஆதரவை இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
எனினும் தென்சீன கடலில் அமெரிக்காவின் தலையீட்டை சீன ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
அத்துடன் சீனா மற்றும் அதற்கு சொந்தமான நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்தும் ஷி ஜின்பிங் அதிருப்தியை வெளியிட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் வெள்ளை மாளிகை மற்றும் சீன அரச ஊடகங்கள் இந்த கலந்துரையாடலை ‘நேர்மையானதும் ஆக்கபூர்வமானதுமான” உரையாடல் என சுட்டிக்காட்டியுள்ளன.