தாய்வானில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தாய்வானில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு பதிவாகியுள்ளது.

ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜப்பானின் ஒக்கினாவா தீவு, மியா கோஜிமா தீவு உள்ளிட்டவற்றுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தாய்வானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This