ராகம வைத்தியசாலையில் நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணை!
ராகம போதனா வைத்தியசாலையில் கோ-அமோக்ஸிக்லெவ் என்ற ஊசி மருந்தை செலுத்திய பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில் உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
கோ-அமோக்ஸிக்லெவ் ஊசி மருந்தினை ஏற்றிய பிறகு நோயாளி இறந்தாரா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமையால் மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
தெனிய மாவரல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
காது வலி காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையின் 21ஆம் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized