இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பலி ; ராகமையில் சம்பவம்!

இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பலி ; ராகமையில் சம்பவம்!

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறிடங்களில் இருவர் மோதப்பட்டு  உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள  கடவை ஒன்று  மூடப்பட்டிருந்தபோது, கடவையை கடக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.

இந்த விபத்தையடுத்து அந்த ரயில் மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி அதன் பயணத்தை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ராகமை – துடுவேகெதர பகுதியில் வைத்து அதே ரயிலால  மற்றுமொரு நபர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் 50 வயதுடைய நபர் என்பதுடன் அவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This