இந்தோனேசியா வெள்ளப்பெருக்கில் 19 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 19 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், குறித்த விபத்தில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா மாகாணத்தில் தொடர்ந்தும் பெய்து வந்த மழையினால் அங்கு மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் வீதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அங்கிருந்து 8,000க்கும் அதிகமான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES உலகம்