இன்றைய ராசிபலன் – 11.03.2024

இன்றைய ராசிபலன் – 11.03.2024

பொதுப்பலன்: வழக்கு பேசி தீர்க்க, தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, அடுப்பு அமைக்க, காவல் தெய்வங்களை வணங்க, பழைய வாகனம் விற்க நன்று. சிவஸ்துதி படித்து, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம், தாமரை, அரளி மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் காரியத் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதைவிட்டு, அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் நம்பிக்கை தரும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.

ரிஷபம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

கடகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை உயரும். வேலைச்சுமை குறையும்.

சிம்மம்: சந்தேகத்தால் தேவையற்ற சங்கடங்கள், குடும்பத் தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். யாரி
டமும் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் போட்டி களை சமாளிக்க போராடுவீர்கள்.

கன்னி: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர் களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப் படுத்துவீர்கள். எடுத்த வேலையை விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

துலாம்: ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். மனைவியுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

விருச்சிகம்: இங்கிதமாக பேசி, கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். முகப் பொலிவு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிநாட்டு பயணங் களுக்கு வாய்ப்பு உண்டு. முன்கோபம் நீங்கும்.

தனுசு: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பேச் சில் தெளிவு பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பெற்றோர் விருப்பத்தை அறிந்து செயல்படுவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். பதவிகள் தேடி வரும். மகிழ்ச்சி கரமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். குடும்
பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வாயுக் கோளா றால் அவதிப்படுவீர்கள். வாகன வகையில் தேவை யற்ற செலவுகள் ஏற்படும்.

CATEGORIES
TAGS
Share This