இன்றைய ராசிபலன் – 07.03.2024
பொதுப்பலன்: வழக்கு பேசி முடிக்க, வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைக்க, மிருதங்கம், சமையல், தியானம் கற்றுக் கொள்ள, வெற்றிலை பயிரிட, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் தடைகள் விலகும். நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நன்மை உண்டு. சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். யோகா, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டு.
சிம்மம்: பழைய சம்பவங்கள் மகிழ்ச்சி தரும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
துலாம்: முகப் பொலிவு கூடும். கணவன் – மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் சேமிப்பு மேலும் அதிகரிக்கும்.
மகரம்: ஈகோ பிரச்சினைகளை களைந்து கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை.
கும்பம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாகனச் செலவு குறையும். பதவி உயர்வால் பொறுப்புகள் கூடும்.
மீனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். திடீர் பணவரவால் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்.