இன்றைய ராசிபலன் – 27.02.2024
பொதுப்பலன்: தானியங்கள் அறுவடை செய்ய, வழக்கு பேசித் தீர்க்க, கடன் வசூல் செய்ய, பணியாட்களை விடுவிக்க, வாகனம் விற்க, வீடு கட்டுவதற்கு கடனுதவி பெற, வியாபாரம் தொடங்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினைகள் தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.
ரிஷபம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்.
மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர். புதிய சிந்தனைகள் தோன்றும்.
கடகம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். வாகன பழுது நீங்கும். குழப்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்:சிறு சிறு சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள், பெற்றோரின் ஆதரவு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
கன்னி: சமூகத்தில் அந்தஸ்து உயரும். அழகு, இளமை கூடும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர்.
துலாம்: முன்கோபம் அதிகரித்து உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திடீர் பணவரவால், கடன் தொல்லை நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
தனுசு: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். ஈகோ பிரச்சினை நீங்கி தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
கும்பம்: தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
மீனம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழல் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்ற திட்டமிடுவீர்.