நல்லிணக்க ஆணைக்குழு சட்டம் தொடர்பில் ஆராய்வு!

நல்லிணக்க ஆணைக்குழு சட்டம் தொடர்பில் ஆராய்வு!

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச ‘உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்’ வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டு விசேட கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளன.

அவற்றில் ஒரு கலந்துரையாடல் ஹிமாலயன் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல நிபுணத்துவ அறிவுள்ள பல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. அடுத்த கலந்துரையாடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.

இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்தும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் இணைந்திருந்த நபர்கள் அதற்கு முழுமையாக பங்களிப்பதோடு ஆலோசனைகளையும் யோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This