விஜயின் கடைசி படத்தை இயக்க போட்டிப்போடும் இயக்குநர்கள்!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69ஆவது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
விஜய் தனது 69ஆவது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இதனால் அவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
விஜயின் 69ஆவது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. டிவிவி தனய்யா தனது தயாரிப்பு பேனரான டிவிவி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை இயக்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் எச்.வினோத், காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ளது.