ஆனந்த் அம்பானி திருமணம்: ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் 51 ஆயிரம் பேருக்கு விருந்து!

ஆனந்த் அம்பானி திருமணம்: ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் 51 ஆயிரம் பேருக்கு விருந்து!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2ஆவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நாளை மார்ச் 1ஆம் திகதி முதல் வருகிற மார்ச் 3ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றிரவு ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்து 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்து அளித்தது.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

இதன்மூலம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This