முள்ளந்தண்டு பிரச்சினையால் பாதிப்படையும் மாணவர்கள் – புத்தகப் பையின் நிறையே காரணம்!

முள்ளந்தண்டு பிரச்சினையால் பாதிப்படையும் மாணவர்கள் – புத்தகப் பையின் நிறையே காரணம்!

கல்வித்துறையில் பாடத்திட்டங்கள் விரிவடைந்து வருவதன் காரணமாக மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாடப் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டதுடன் குறித்த விடயம், நீண்டகாலமாக சமூகத்தில் பேசுப்பொருளாக காணப்பட்டு வருகின்றது.

எனினும் இதற்கு உரிய தீர்வை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் தவறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

இந்தநிலையில், முள்ளந்தண்டு பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் நிறை அதிகாரிப்பால் சிறார்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் காணப்படுவதாக பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.ஞானசேகரம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This