கொட்டகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் விசேட ஊர்வலம்
சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் தடுப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை முன்னிட்டு தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் ஒன்று 10-10-2024 கொட்டகலை நகரில் நடைபெற்றது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
தோட்டப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு சரியான முறையில் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணிவகுப்புடன், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றமை வசேட அம்சமாகும்.
கொட்டகலை நிருபர்