இந்திய படகுகளின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்தவும்!

இந்திய படகுகளின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்தவும்!

இந்திய படகுகளின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை இந்திய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எமது  போராட்டம் தொடர்போராட்டமாகி கடலிலும் தரையிலும் போராட்டமாக மாறும்  என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் இந்திய துணை துதரக்கத்திற்கு  அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டபோதே இதனை தெரிவித்தார்கள் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் நீண்டகாலமாக இந்திய கடற்தொழிலாளர்களின். அத்து மீறலை கண்டித்து போராடிவருகிறோம்.

நாம் இனி என்ன தான் செய்வது ஒருதடவை இந்திய கடற்தொழிலாளர்கள் அத்து மீறிவருகின்ற போது எமது சேத மதிப்பானது பல இலட்சங்களை தாண்டுகின்றது.

இதனை ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது இவை தெடர்பில் பல தரப்பட்ட முறைப்பாடுகளை செய்தும் உள்ளோம் எனினும் எந்த பயனும் இல்லை  ஒரு நாட்டு கடற்தொழிலாளர்கள் தமது நாட்டின் எல்லையை மீறி தாண்டி வந்து அத்து மீறி தொழில் செய்கிறார்கள் என்றால் இரண்டு நாட்டு கடற்படையினலும் அனுமதி வழங்குகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு வருகிறது. எமது வளத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை அழிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துமீறி வருபவர்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கப்படுமாயின் இந்த அத்து மீறலை தடுக்கலாம் கண்துடைப்பிற்காக இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் ஏமாற்று நாடகமாகவே உள்ளது. இந்திய கடற்தொழிலாளர்கள் தொப்பிள் கொடி உறவு என கூறிக் கொண்டு எமது வாழ்வாதாரத்தை இல்லாது செய்கிறார்கள்.

இதனை எவ்வாறு ஏற்பது, இந்திய கடற்தொழிலாளர்களது அத்து மீறல்களை தடுத்து நிறுத்துங்கள் நாங்கள் கடலையே நம்பியுள்ளோம் எமது வாழ்வாதாரத்தை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

இலங்கை இந்திய அரசாங்கங்கள் இருநாட்டு கடற்தொழிலாளர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்காது  அத்துமீறலை தடுத்துமாறு கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This