ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் ? – யாழில் போராட்டம்!

ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் ? – யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) சிலர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது, பதில் அதிபராக இந்திரகுமார் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினருடனான கலந்துரையாடலில், மத்திய கல்லூரி பழைய மாணவரான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, பதில் அதிபர் இந்திரகுமாரை அதிபராக்குவேன் என உறுதியளித்ததாக பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கமும் தற்போது இரண்டு பிரிவக இயங்குகிறது. ஈ.பி.டி.பி ஆதரவு அணியும், பொது அணியும் செயற்படுகிறது.

இந்த நிலையில் பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப அண்மையில் கல்வியமைச்சினால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் கலந்து கொண்ட நிலையில், எந்தவிதமான அரசியல் சிபாரிசும்- தலையீடும் இல்லாமல்- பாடசாலையின் பிரதி அதிபராக தற்போது கடமையாற்றி வரும் திருமதி சுகந்தினி செல்வகுமாரன் அதிக புள்ளிகள் பெற்றி அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலைமையில், திருமதி சுகந்தினி செல்வகுமாரன் பாடசாலை அதிபராக பதவியேற்க தயாரான போது, தற்போதைய பதில் அதிபர், வரும் புதன்கிழமை கடமைகளை ஒப்படைக்க அவகாசம் கோரியதாக பாடசாலை பழைய மாணவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவின் துணையுடன் அரசியல் பின்புலத்தில் பதில் அதிபரை, அதிபராக நியமிக்கும் சூழ்ச்சிகள் நடக்கவே இந்த அவகாசம் கோரப்பட்டுள்ளதாக பாடசாலை பழைய மாணவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த பின்னணியில், இன்று ஈ.பி.டி.பி ஆதரவு பழைய மாணவர் சங்கத்தின் துணையுடனும் இன்று திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க அதிபர் பதவிக்காக சிலரால் திட்டமிட்டு மாணவர்களை பகடைக்காயாக்கி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் என பாடசாலை வட்டாரம் விசனம் தெரிவித்தது.

CATEGORIES
TAGS
Share This