“தமிழக வெற்றி கழகம்” – பெயரில் திருத்தம் செய்த நடிகர் விஜய்!

“தமிழக வெற்றி கழகம்” – பெயரில் திருத்தம் செய்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார்.

அவர் அறிவித்த ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This