இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினமும் தொடரவுள்ளது.

ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு பிரவேசித்த பெருமளவிலான நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதேவேளை, சுகாதாரத்துடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்தவொரு சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This