ஆளும் கட்சியில் இணையத் தயாராக உள்ள சரத்பொன்சேகா?

ஆளும் கட்சியில் இணையத் தயாராக உள்ள சரத்பொன்சேகா?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆளும் கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தம்மை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குமாறு அவர் கட்சித் தலைவரிடம் ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, சஜித் பிரேமதாசவும் பல சந்தர்ப்பங்களில் சரத் பொன்சேகாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர் இருந்தால் வெளியேறலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் இரண்டு முன்னாள் இராணுவத் தளபதிகள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பொன்சேகா மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர் சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், பொன்சேகா அது தொடர்பில் கூறுகையில், சிறிலங்காவின் நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This