யாழில் இசை நிகழ்ச்சியை பனை மரத்தில் ஏறி பார்வையிட்ட இளைஞர்கள்!

யாழில் இசை நிகழ்ச்சியை பனை மரத்தில் ஏறி பார்வையிட்ட இளைஞர்கள்!

யாழ். முற்றவெளி மைதானத்தில் தற்போது பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த இசை நிகழ்வை பனை மரத்தில் ஏறி நின்று இளைஞர்கள் பலர் பார்வையிட்டு வந்துள்ளனர்.

மேலும், ஹரிகரனின் இசை நிகழ்விற்கு தென்னிந்திய கலைஞர்கள் பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சி இலவசம் என அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் ஆசனப்பதிவுகளுக்கு கட்டணம் அறவிடப்பட்டது. ஏனையவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை பார்வையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள பனைமரங்களில் இளைஞர்கள் ஏறி நின்று நிகழ்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This