இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை வருகை!

இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை வருகை!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுப்படி சிறிலங்கா கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘ஐஎன்எஸ் கரஞ்ச்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலின் நீளம் 67.5 மீட்டர் ஆகும்.

‘INS Karanj’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, ​​சிறிலங்கா கடற்படையினர் அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் நீர்மூழ்கிக் கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS Karanj’ நீர்மூழ்கிக் கப்பல் பெப்ரவரி 05, 2024 அன்று நாட்டைவிட்டு புறப்பட உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This