கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்று(02) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட படையினர் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு – ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
CATEGORIES பிராந்திய செய்தி