பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு?

பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு?

தொடர் டீசல் விலை உயர்வால் பேரூந்து கட்டணத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேரூந்து சங்கங்கள் கூறுகின்றன.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்,

“முன்னதாக, ஒரு லீட்டர் டீசல் விலை, 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. அத்துடன் நிற்காமல், நேற்று, டீசல் விலை, மீண்டும், 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, பேரூந்து கட்டணம் அதிகரிக்க வேண்டும்.”

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,

“இரண்டு வாரங்களுக்குள் கண்டிப்பாக பேரூந்து கட்டணத்தை உயர்த்துவோம். இந்த நேரத்தில் குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும்..”

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This