யாழில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழ். சுன்னாகம் பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This