பெலியத்த படுகொலை சம்பவம் – இரண்டு பெண்கள் கைது!

பெலியத்த படுகொலை சம்பவம் – இரண்டு பெண்கள் கைது!

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This