இன்று குடியரசு தின விழா: பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிப்பு!

இன்று குடியரசு தின விழா: பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிப்பு!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் இன்று 75ஆவதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு 10 மணி முதல் டெல்லியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல் சிறப்பு ஆணையர் மதூப் திவாரி கூறியதாவது:

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதுடெல்லி 28 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசு தின விழாவில் சுமார்77,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளுக்காக காலை 8 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு அவர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ ஆங்காங்கே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடியரசு தின விழா நடைபெறும் காலை 10.20 முதல் 12.45 மணி வரைவிமானங்கள் புறப்பட, தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படை விமானங்கள், ஆளுநர், முதல்வர் பயணம் செய்யும் விமானங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக டெல்லிவான் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் இருஅடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. டெல்லி முழுவதும் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This