கொழும்பு ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துபிட்டி , ஜிந்துபிட்டி  வீதி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்றவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கொழும்பு கரையோர பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜோஜ்ராஜ் தனுஷ்ராஜ் என்ற 26 வயதுடைய இளைஞன் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This