அரசு ஊழியர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

அரசு ஊழியர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, முன்னுரிமை இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட சில இடமாற்ற சுழற்சிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அதனால் சம்பந்தப்பட்ட இடமாற்ற சுழற்சிகளில் உள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அரச சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This