பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒன்றிணைவோம்!

பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒன்றிணைவோம்!

யுத்த வெற்றியின் பெயரில் இந்நாட்டில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயல்பட்டு நாட்டை வங்குரோத்தாக்கி, நாட்டை அழித்து நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பம் அதில் திருப்தியடையாமல், இன்று பொருளாதார பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் நாட்டையே தின்றுவிட்ட ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்து, அதிக விலைக்கு நானோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்த இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் இங்கு தெரிவித்தார்.

மக்கள் வீதியில் இறங்கி தமது இன்னல்களை தெரிவிக்கும் போது, பொதுச் சட்டத்தை மீறும், மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் வேளையில், இந்தப் பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் மனிதாபிமானப் பணியை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்னெடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹொரவ்பதானையில் இடம்பெற்ற ஜனபௌர (மக்கள் அரண்) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This