சீனி சாப்பிடுவதை நிறுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!

சீனி சாப்பிடுவதை நிறுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் குறித்து மக்களுக்கு நாளுக்கு, நாள் விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டீ, காஃபி போன்றவற்றில் நாம் சேர்த்துக் கொள்ளும் சீனி எனப்படும் வெள்ளை நிற கிறிஸ்டல் சர்க்கரையை பார்த்தாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது.

ஆனால், இந்த சீனி என்பது மட்டுமே சர்க்கரை அல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் மாவுச்சத்து என்னும் வகையிலான சர்க்கரை சத்து இருக்கத்தான் செய்கிறது. பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என எதுவானாலும் அதில் சர்க்கரை சத்து உண்டு.

அளவுக்கு அதிகமான சர்க்கரை சத்து நம் உடலில் ஏற்படும்போது அதனால் ஹர்மோன் சமநிலை பாதிப்பு அடையக் கூடும். குறிப்பாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படும் மற்றும் அழற்சி உண்டாகும். பெண்களைப் பொருத்தவரையில் மாதவிலக்கு காலத்தில் வயிற்றுப்பிடிப்பு, உப்புசம் மற்றும் எண்ண தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

ஆனால், சர்க்கரையை மட்டும் குறைத்துக் கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுதான் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முழு தானியங்கள், மெல்லிய புரதம், வெவ்வேறு வகையான பழங்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை தவறுகின்ற பிரச்சனையை தவிர்க்கலாம்.

சர்க்கரையால் அழற்சி ஏற்படும்

சர்க்கரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் பிரேர்னா திரிவேதி கூறுகையில்,

சர்க்கரையால் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளில் பிரதானமானது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆகும். இன்சுலின் உற்பத்தி குறைவதால் நம் உடலில் சர்க்கரை தன்மை அதிகரிக்க கூடும். இதனால் கூடுதல் இன்சுலினை பெருக்க உடல் முற்படும். அதனால் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி ஆகும்.

இந்த ஆண்ட்ரோஜன் ஆண்களுக்கான ஹார்மோன் ஆகும். இதனால் மாதவிலக்கு தடைபடும் அல்லது சீரற்ற வகையில் மாதவிலக்கு ஏற்படும் மற்றும் பரு உண்டாகும். அதேபோல சர்க்கரையால் ஏற்படுகின்ற அழற்சி காரணமாக மாதவிலக்கு கால வயிற்றுப்பிடிப்பு கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மாதவிலக்கு காலத்தில் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை பெண்களிடம் அதிகரிக்கும். ஆனால், அதற்கு இடமளிக்கும் பட்சத்தில் வலி மற்றும் இதர தொந்தரவுகள் அதிகரிக்கும். அதே சமயம், சர்க்கரை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

செயற்கையான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் எப்போதுமே ஆபத்தானவை தான். அதற்குப் பதிலாக முழு தானிய உணவுகள், நிறையூட்டப்படாத இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெல்லம், பேரீட்சை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கிற போது, மனதின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபயிற்சி, அரட்டை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

CATEGORIES
TAGS
Share This