பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!
பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் கோஹர் இஜாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுத்தேர்தல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் பல்வேறு தனியார் அமைப்புகள் தேர்தலின்போது தடையில்லா இணைய சேவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், சிறை தண்டனை பெற்று வரும் அவரது மனைவி புஷ்ரா பீபி வாக்களிக்கும் வாய்ப்பை இழந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.