கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது!

கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது!

தமிழ் மக்களின் இருப்பை அழித்ததே கருணா. அவர் தான் பாதுகாக்கப்போகின்றார் என்று அவரை தமிழ் மக்கள் நம்பினால் கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாள் உள்ளிட்டவர்களை இன்று (19) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாவீரர் வாரத்தில் கைது செய்யப்பட்ட மிஞ்சிய அரசியல் கைதிகள் மற்றும் சிறையில் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் ஜனநாயக போராளி அமைப்பின் நகுலேஸ் ஆகியோரை சந்தித்தேன்.

நகுலேஸ் உடைய வழக்கு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சார்ந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்தவகையில் அடுத்து வழக்கு தவனைக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது தொடர்பாக வெளிப்படுத்தப்படும் அதேவேளை எமது கட்சி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் தனுஜனை ஆகியோரை கடந்த வாரம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாணை செய்து அதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரமுடியாத விடையங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் கீழே குற்றங்களாக கருத முடியாத காரணங்களை வைத்து அந்த வழக்குகளை தொடரமுடியாது அவ்வாறான நிலையில் இரண்டு மாதங்களாக சிறைச்சாலையில் அடைத்துவைத்திருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல்.

அது மட்டுமல்ல சிறிலங்கா அரசினுடைய உண்மையான இனவாத நிகழ்சி நிரலை இரட்டை வேடத்தில் அதாவது நினைவு கூறலாம் என உலகத்திற்கு சொல்லிக் கொண்டு நல்லபிள்ளைக்கு நடித்துக் கொண்டு மறுபக்கம் நீனைவு கூறியவர்களை கைது செய்து அவர்களை பழிவாங்கும் கோணத்தில் செயற்படுவதை உலகத்திற் தெரியப்படுத்துவோம் அதேவேளை அரசின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த விடையங்களை வருகின்ற மாச்மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்தி அதனை நேரடியாக பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்கவின் கடைசி கனவு தான் மக்களால் ஜனாதிபதியாக வேண்டும் என அந்த கனவு சாத்தியமற்றது ஏன் என்றால் இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் 3 ஆக பிரிவும் அதனால் ரணிலுக்கு வாக்குகள் குறையும் அவர் தனிநபராக ஜக்கிய தேசிய கட்சியினுடைய ஒருவராக இருந்தால் சில வேளை அவருக்கு வாக்குகள் விழும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

எனவே இனி இந்த விளையாட்டுக்களுக்கு தமிழ் மக்கள் விடப்போவதில்லை தமிழ் மக்களை தமிழ் தலைவர்களே ரணில் நல்லவர் அவர் வந்தால் எல்லாம் செய்வார் என ஏமாற்றி வைத்துள்ளனர் ரணில் வந்ததின் பின்னர் அவர் உண்மையான முகத்தை ரணிலே காட்டிவிட்டார் .

கிழக்கில் திருகோணமலை நகரில் வாழுகின்ற 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமாக மெகா சிற்றி என்ற திட்டம் இதனை ரணில் விக்கிரமசிங்காவால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது இதனால் திருகோணமலை தமிழருடைய கையில் இருந்து பறிபோயுள்ளது இந்த இரண்டரை வருடத்தில் ரணில் கோட்டாவை விட மிக மோசமாக ஜனநாயத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This